Saturday 13 July 2013

என்கடல் பயண கட்டுரை பாகம் 1


எனது கப்பல் பயணங்களை சொல்லலாமென்று நினைக்கிறேன் ..

இது நடந்தது 2008 ஜூலை மாதம் ...நாள் நினைவிற்கு வர காரணம் எனக்கு பெண்பார்க்க ஊருக்கு போகும் நேரம் ...நான் புறப்பட்ட கப்பல் இரவு 11.30 க்கு புறப்பட்டது என்றும் இல்லாமல் அன்று அளவுக்கு அதிகமான மக்களுடன் ஹுதுஹுது என்னும் கப்பல் புறப்பட்டது ..நான் வந்து சேர்ந்தமையால் எனக்கு இருக்க கூட இடம் கிடைக்கவில்லை மிகவும் சிரமப்பட்டு அடித்தளத்தில் இருக்க இடம் பிடிக்கலாம் என நினைத்து வந்தால் அங்கும் நிரம்பி வழிகிறது மக்கள் கூட்டம்

ஒருவாறாக ஒரு இடம் ஒரு ஆட்டின் தயவில் கிடைத்தது அதன் பக்கத்தில் சிறிய இடம் வெற்றிடமாக இருந்தது காரணம் ..அது என்னை ஏறும்போதே ஒருவிதமாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தது ..நான் அதை தொல்லை செய்யவேண்டாமென நினைத்து மறுபடியும் மக்கள் படித்திருக்கம் இடத்திற்கு வந்த பொது ஒரு சிறிய இடம் ஒருவரது கால்மாட்டில் வெற்றிடமாக இருந்தது அங்கு இருக்ககிடைத்த இடத்தை படுக்க உபயோகித்துக்கொண்டேன் காரணம் அவ்வளவு அசதியாக இருந்தது

சிறிது கண்ணயர்ந்து தூங்கிவிட்டேன் யாரோ மிதித்ததினால் கண்திறந்து பார்த்தபோது தான் தெரிந்தது பலரது கால்கள் என் உடம்பில் தான் தலகானியாக பயன்படுத்தி இருந்தது ..அப்போதும் அந்த ஆடு இடைவிடாமல் சத்தம் போட்டுக்கொண்டு தான் இருந்தது எனக்கு அது என்னமோ ஒரு அபாய குரலை எனக்கு உணர்த்துவது போல் இருந்தது ...
அப்போது தான் ஒரு பெரிய சத்தம் கேட்டது நான் பயணித்த கப்பல் ஒரு பெரிய உலச்சலுடன் உலைகிறது...

      கப்பலில் நான் மட்டும் தான் தூங்காமல் இருந்தது அப்போதுதான் எனக்கு தெரிந்தது பாதி மக்கள் பாதிமயக்கத்தில் மீதிமக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறார்கள் ஆப்போதும் அந்த ஆடு அதன் அழுகுரலை விடவில்லை நான் படுக்கையை விட்டு மெல்ல எழுந்தேன் பல இடங்களில் இருந்து கைபேசியில் பலர் பேசும் நிகழ்வுகள் நடக்கிறது எனக்கு என்ன வென்று புரிபடவில்லை மெதுவாக கடலை பார்க்கும் போது எங்கும் இருள்மயம் எதற்க்காக நடுக்கடலில் கப்பல் நிற்க வேண்டும் அப்படி நிறுத்துவது கிடையாதே என் சந்தேகங்கள் பீதியில் மறைந்து போய் கொண்டிருந்தது ..
அப்பொழுது ஒருவன் ஓடி வந்து சொன்னான் கப்பல் கடல் கோரலில் (பவழப்பாறை )தட்டி அடிபாகம் உடைந்து விட்டது தண்ணீர் உள்ளே வந்து கொண்டிருக்கிறது அனைவரும் லைப் ஜாக்கெட் போட்டுக்கொள்ளுங்கள் ...கப்பலில் போதுமான அழவு லைப் ஜாக்கெட் கிடையாது என்பது எனக்கு கிடைக்காத பொது தெரிந்து கொண்டேன்
மக்களில் பீதி கொண்ட முகங்கள் அங்கங்கு மின்னி மறைவது எனக்குள் ஒருவித பயத்தை உண்டாக்கியது ...இது நடப்பது விடியற்காலை 3 மணிக்கு ஒருவன் கோஸ்ட் கார்ட் டுக்கு அழைப்பு விடுத்து கொண்டிருந்தான் இவன் 100மொத்தம் பயணிகள் தான் இருக்கிறார்கள் என தவறான செய்தியை கூறினான் காரணம் அதிகபட்ச்சமான ஆட்களை இவன் ஏத்தி வந்தது சட்டப்படி குத்தம் ...கோஸ்ட் கார்ட் வரும் போது காலை 6 மணி அப்போது அடித்தளம் முழுவதும் கிட்டத்தட்ட மூழ்கிவிட்டிருந்தது
வந்தவர்கள் ஆட்களை எண்ணியபிறகு தான் இவர்கள் கொடுத்த தகவல் தவறு என தெரிந்திருக்கிறது காரணம் அவர்கள் வந்தது 100 ஆட்கள் கொள்ளளவு உள்ள சிறிய கப்பலில் அதில் முதலில் கர்ப்பிணிப்பெண்கள் முதியோர்கள் குழைந்தைகள் நோயாளிகள் ஏற்றப்பட்டனர் இளவட்டங்களை மோட்டுமொரு படகு வந்து கொண்டு செல்வதாக சொன்னார்கள் ..அப்போது தான் ஒரு சம்பவம் நடந்தது அதுவரை வேலை செய்து கொண்டிருந்த ஜெனரேட்டர் கோளாறு பட்டு செயலிழந்திருந்தது ..மறுபடியும் நீரின் வரத்து அதிகமாக கீழ்பாகமும் பின்பாகமும் நீரில் மூல்கிக்கொண்டிருந்து ..எனக்கும் அதில் உள்ள மத்தவர்களுக்கும் மனது பக் பக் ...அப்போது தான் ஒரு பெரிய கப்பல் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது அப்போது நேரம்.9.30 வந்தவர்கள் துரிதகதியில் எங்களை மீட்டு படகு வழி கப்பலில் ஒப்படைத்தனர் அதில் இருந்தவர்கள் எங்களை நன்றாக கவனித்துக்கொண்டனர் பகல் 11.30க்கு நாங்கள் தலைநகர் மாலிக்கு வந்தடைந்தோம்
மீடியாக்கள் எங்களை சூழ்ந்து கொண்டு விசாரிப்பு நடந்தது ..பதில் சொல்ல முடியாமல் என்னை பார்க்க வந்த நண்பரிடம் நான் முதலில் சொன்ன வார்த்தை நல்ல பசி இருக்கு எங்கடா ஹோட்டல் இருக்கு
.

                              


அன்று இரவு செய்தியில் நான் பயணித்த படகுகப்பல் கடலில் முழுவதும் மூழ்கிவிட்டதை அறிந்து மனம் தூங்காமல் கண் மூடி தூங்கினேன்

2 comments:

  1. Titanium Band Rings | TITanium Arts | TITanium Art
    Buy Titanium Band Rings by TITANA art at TITANA titanium nose jewelry artist. The worlds most 바카라 사이트 위너바카라 detailed titanium 170 welder and authentic titanium frame glasses textiles, with photos, illustrations and other information you $9.00 · ‎In stock titanium jewelry piercing

    ReplyDelete